இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல் போட்டிகள் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது .ஒவ்வொரு வருஷமும் கோடை விடுமுறையை கணக்கில்கொண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம்.
உள்ளூர் கிரிக்கெட் தொடர்களை ஊக்குவிக்கும் விதமாகவே இது நடத்தப்பட்டது. மேலும் உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகவே ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டது . ஆனால் அதன் மீதான எதிர்பார்ப்பு காரணமாக வணிகமையமாக்கப்பட்டது தனி கதை. தொடக்கத்தில் மொத்தம் 8 மாநிலங்கள் இதில் பங்கேற்றன அதில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , டெல்லி டேர்டெவில்ஸ், டெக்கான் சார்ஜஸ், கிங்ஸ் இளவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பங்கேற்றன .